உலகத்தில் ஒரு சில பொருட்களின் விலை நம்மை அசர வைக்கும் அந்த வரிசையில் ஒரு ஊசியின் விலை 16 கோடி ரூபாய் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் ஒரு ஊசியின் விலை நம் அனைவரையும் வாயடைக்க செய்யும் அந்த விலை தான். அமெரிக்கா டாலர் மதிப்பில் சுமார் 2 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் வரும்.எதற்காக இந்த ஊசி யாருக்கெல்லாம் இந்த ஊசி செலுத்த படுகிறது அந்த ஊசியை தயாரிக்கும் நிறுவனம் எது? அந்த ஊசியின் விலை எதற்கு கோடிகளில் விற்கப்படுகிறது இதை எல்லாம் நாம் இப்பொது காணலாம்.
இந்த ஊசியின் பெயர் Zolgensma ஆகும். இவற்றை அமெரிக்காவில் உள்ள நோவார்டிஸ் (Novartis) என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஊசி முதன் முதலில் மார்ச்-9 2019 -ஆம் ஆண்டு தான் United Kingdom’s National Health Services (NHS) அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்கா நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த தடுப்பூசி முதுகு தண்டில் ஏற்படும் ஒரு விதமான நியூரான் அணு குறைபாட்டை சரி செய்வதற்கும் பிறகு அதை மறு கட்டமைப்பதற்கு இந்த ஊசி உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது ஒரு முறை மட்டும் குழந்தைங்களுக்கு செலுத்தினால் போதும் எனவும் அதன் பிறகு குணம் அடையும் சதவீதம் அதிகம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஊசியின் விலை காண காரணம்
இந்த ஊசி கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகள் தேவை பட்டதாகவும் பிறகு பல நூறு பில்லியன் அமெரிக்கா டாலர்கள் ஆராய்ச்சிக்காக செலவிட்டதால் இதற்கு அந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என நோவார்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஊசி வருடம் ஒரு முறை லாட்டரி முறையில் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக பிரித்து குடுக்க படுகிறது. இந்தியாவிலும் பல குழந்தைகள் இதனால் பலன் அடைந்துள்ளார்கள். எனினும் இந்த நோய் மிக அரிதானது எனவும் மேலும் இதனால் பாதிக்க பட்ட குழந்தை இந்த ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலும் மிக குறைத்து அளவில் இதை தயாரிப்பதால் இதன் சந்தை மதிப்பு பல கோடி விலை போகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பொது தமிழ் நாட்டிலும் ஒரு குழந்தை பாதிக்கபட்டுள்ளது அந்த குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து உங்களால் முடிந்த தொகையை அந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு நீங்கள் வழங்கலாம்.
நன்கொடை கொடுக்குமிடம்: https://bit.ly/35uEjQL