வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் ஆண்டு தோறும் பல லட்சம் மாணவர்கள் படித்து வெளியே வருகின்றனர். அவர்கள் அனைவர்க்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நாம் சொல்லி விடமுடியாது. பல மாணவர்கள் தங்கள் வாய்ப்பு மற்றும் தகுதிக்கேற்ப வேலைக்காக காத்துகொண்டு இருக்கின்றனர். எனவே தற்போது வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மற்றும் வேலைக்காக முயற்சிக்கும் படித்தவர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் உதவிதொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதற்கு எப்படி விண்ணப்பித்து பெறுவது, பிறகு எப்போது கடைசி நாள் என்பது கீழே காணலாம்.
உதவித்தொகை அறிவிப்பு
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய் பரவல் காரணமாக பலரும் தங்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்டது பல படித்த இளைஞர்கள் தான். தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஆண்டுதோறும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை பெற தகுதி உடையோர் தங்கள் கல்வி தகுதியினை பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்பவர்கள் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரசு தரப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை எப்படி பெற வேண்டும்
தற்போது இத்திட்டத்தின் மூலம் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200 வழங்கப்படும் எனவும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, மேலும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து 1 ஆண்டு நிறைவு செய்தாலே போதுமானது.
இதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 முதல் 1000 வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவி தொகை பொறியியல்,மருத்துவம், சட்டம்,மருத்துவம், விவசாயம் போன்ற தொழிற்கல்வி படித்த பட்டதாரிகள் பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் சுமார் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த உதவித்தொகை பெற தகுதி உள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற அரசு இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பின்குறிப்பு – இந்த உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்ற வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.