Home News தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மாநகராட்சி, நகராட்சியில் 1933 வேலைகள் அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மாநகராட்சி, நகராட்சியில் 1933 வேலைகள் அறிவிப்பு.!

7
TNMAWS Job vacancy apply online
Tamilnadu Government Municipal Job vacancies.

தமிழக அரசின் சார்பாக பல்வேறு மாநகராட்சி மற்றும் நகராட்சியில் தற்போது உள்ள 1933 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அலுவலக பிரிவுகளில் உள்ள 1,933 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தகுதி உள்ளவர்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே இந்த காலிப்பணியிடங்களுக்கு 2024 பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 12 மார்ச் 2024 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNMAWS மூலம் விண்ணப்பிக்கலாம்

இதற்கு விருப்பம் தகுதியும் உள்ளவர்கள் www.tnmaws.ucanapply.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் உதவியாளர் (Assistant), உதவிப் பொறியாளர் (Assistant Engineer), இளநிலை பொறியாளர் (Junior Engineer), வரைவாளர், துப்புரவு ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர்(Technical Assistant) உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் 30 ஜூன் 2024 ஆம் தேதி நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version