நாம் தமிழர், அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து விலகி 3000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக டி.ஆர் பாலு, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, ஆர் எஸ் பாரதி, திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்ந நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற போராடியவர் டாக்டர் கலைஞர்.
திமுக தாழ்த்தப்பட்டோர், மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது.
அண்ணா,மற்றும் கலைஞர் வழியில் தற்போது இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும். அரசு போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம், ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை, அரசு அதிகாரிகள் கையொப்பம் தமிழில் எழுதப்படவேண்டும் என செயல்படுத்தி உள்ளோம்.
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பணியிடங்களில் சேர தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.