தமிழ்நாடு போலீஸ் வேலைவாய்ப்பு 2021:
தமிழகத்தில் இன்று 13.08.2021 நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன அதில் மிகவும் முக்கியமானது தமிழக காவல்துறையில் 14,137 காலியிடங்கள் அறிவிப்பு!. ஏற்கனவே நடைபெற்ற காவலர் தேர்விற்கு தற்போது உடற்தகுதி தேர்வுகள் நடந்த நிலையில். மேலும் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் தாக்கல் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10 மணி முதல் துவங்கியது. இந்த சட்ட மன்ற கூட்டமானது சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
இதில் 2021 மற்றும் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மாண்புமிகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்தார். தமிழக வரலாற்றில் முதன் முறையாக இ-பட்ஜெட் முறையில் காகிதமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021:
இதில் குறிப்பிடப்பட்ட காவல்துறை வேலைவாய்ப்பு மற்றும் காலிப்பணியிடங்கள் நிரப்ப ரூ.8,930.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு போன்ற அரிப்புகள் வெளியாகியுள்ளன, மற்றும் தேர்தல் வாக்குறுதியில் உள்ள அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் அறிவிப்பு.
Police
No