Home News Garena Free Fire உள்ளிட்ட 54 சீன மொபைல் ஆப்களுக்கு தடை மத்திய அரசு

Garena Free Fire உள்ளிட்ட 54 சீன மொபைல் ஆப்களுக்கு தடை மத்திய அரசு

0
Garenafree free fire and other 54 chinese apps banned list
Garenafree free fire and other 54 chinese apps banned list

மத்திய அரசு பாதுகாப்பு குறைபாடு மற்றும் அச்சுறுத்தல் காரணங்களுக்காக மேலும் 54 சீன மொபைல் ஆப்களுக்கு தடை விதிக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

54 Apps Banned list, Is garena free fire banned in india

தடை விதிக்கப்படவுள்ள மொபைல் ஆப்களில், Garena Free Fire – Illuminate, Beauty Camera, Sweet Selfie HD, Beauty Camera Selfie Camera, Dual Space Lite, Equalizer, and Bass Booster, CamCard for SalesForce Ent, Music Plus – MP3 Player, Isoland 2: Ashes of Time Lite, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Chess, Onmyoji Arena, AppLock. ஆகிய மொபைல் ஆப்களும் இதில் உள்ளன.

இந்த ஆப்கள், சீன தொழில்நுட்ப நிறுவனங்களாக இருக்கும் டென்சென்ட் மற்றும் அலிபாபா போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமானவை.

ஏற்கனவே 54 apps banned list ல் உள்ள ஆப்களை ப்ளாக் லிஸ்ட் செய்யுமாறு, Google Play Store மற்றும் Apple App Store உள்ளிட்டவற்றிற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆப்களை மக்கள் பயன்படுத்துவதன் மூலம் அவர்களுடைய தகவல்கள் திருடப்பட்டு, சீனா உள்ளிட்ட நாடுகளின் சர்வர்களுக்கு அனுப்பப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைகளின் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சீன செயலிகள் பொருளாதாரத்தின் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version