Home News கொரோனாவால் உயிரிந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் வழங்க வேண்டும்!

கொரோனாவால் உயிரிந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் வழங்க வேண்டும்!

0
4 Lakh rupees compensation to families

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாம் நாட்டை ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கிறது. இதனால் பலர் தங்கள் நெருங்கிய சொந்தங்களையும் நண்பர்களையும் இந்த கொரோனா நோய் தொற்றுக்கு இழந்துள்ளனர். எனவே பலரும் கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்திற்கு மத்திய அரசு ரூபாய் 4 லட்சம் இழப்பீடாக குடுக்க வேண்டும் என தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

கொரோனா வைரஸ் பரவல்

இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் வேகமாக பரவ தொடங்கியது. இதன் காரணமாக அலுவகங்கள் பாதி பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மென்பொருள் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற ஏற்பாடு செய்து கொடுத்தது. தற்போது வரை பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை வாங்கி கொண்டிருக்கிறது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் எல்லாவற்றிருக்கும் விடுமுறை அளித்து ஆன்லைன் கல்வியை நடத்த தொடங்கியது. பிறகு கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது.பிறகு நோய் தொற்று குறைய படி படியாக ஊரடங்கு விளக்கப்பட்டது.

மத்திய அரசின் விளக்கம்:

கொரோனாவால் பலரும் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து அவர்கள் வாழ்வாதாரத்தையே இழந்தும் உள்ளனர். இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் உயிரியிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக சம்மந்தப்பட்ட துறைகள் வழங்க வேண்டும் என ஒரு பொது நல வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு விட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு 2021-22 ஆம் ஆண்டு மாநில பேரிடர் மீட்பு நிதி ரூ.22,184 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்றல் சுமார் 3 லட்சம் பேர் மேல் இறந்துள்ளார்கள். எனவே ஒவ்வரு குடுபத்திற்கும் 4 லட்சம் நிதி குடுப்பது சாத்தியமற்றது எனவும்,பிறகு அப்படி கூடுதல் அதற்கு பேரிடர் மீட்பு நிதி ஒதுக்கப்பட்ட தொகையோடு அதிகமாக வரும் எனவும் இதனால் மத்திய அரசிற்கு நிதி சுமை ஏற்படும் மேலும் சுகாதாரதுறைக்கு ஒதுக்க பட்ட நிதி குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளது. எனவே தற்போது 4 லட்சம் வழங்குவது முடியாத காரியம். தற்போது வரை மத்திய அரசு அந்த நிதியை தடுப்பூசிகள் வாங்கவும், பிறகு படுக்கை வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்கு செலவழித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அதற்கே நிதி அதிகமாக தேவைப்படுவதால் தற்போது கொரோனாவால் உயிரிந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதி என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமற்றது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version