தற்போது உள்ள காலகட்டத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் தாங்கள் எப்படியாவுது அரசு பணியில் சேர்ந்துவிட வேண்டுமென்று ஒவ்வொரு போட்டித்தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றார். எனவே வருடம் தோறும் பல லட்சம் படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு தேர்வெழுதினாலும் அதில் தேர்காவாக போவது ஒரு சில ஆயிரம் மட்டுமே. இந்நிலையில் தமிழக அரசு தற்போது அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அரசாணை வெளியீடு
தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை படி இனி வரும் காலங்களில் தமிழ் வழி படித்த பட்டதாரிகளுக்கும், முதல் தலைமுறை சேர்ந்த பட்டதாரிகளுக்கும், கொரோனா காரணமாக பெற்றோரை இழந்தவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசாணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அரசாணை உத்தரவின்படி கடந்த 1970 முதல் தற்போது வரை உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை நடைமுறையில் சற்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி சுமார் 51 ஆண்டுகளுக்கு பிறகு அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு அல்லது தனியாரால் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கி பயின்று, வளர்ந்து வரும் பெற்றோர்களை இழந்த வாரிசுதாரர்கள், சமந்தப்பட்ட இல்லங்களில் இருந்து பெறப்படும் சான்றிதில் அடிப்படையிலும் வேளையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள் போர்கள் காரணமாக தங்கள் உடல் தகுதியை இழந்தவர்களும் அதற்கான சான்றிதழ்கள் பெற்றுஇருந்தால் அவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னரிமை வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Yes i am ready