ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் (RBI) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை RBI Recruitment Notification வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வங்கியின் மருத்துவ ஆலோசகர் Bank’s Medical Consultant (BMC) போன்ற பணிகளுக்காக காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அந்த அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் இங்கு படித்து தெரிந்துகொள்ளலாம்.
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்புகள் விவரம்
வங்கியின் பெயர் – Reserve Bank of India (RBI)
பணி – Bank’s Medical Consultant (BMC)
காலியிடங்கள் – 02
ரிசர்வ் வங்கி வேலை கல்வித்தகுதி :
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS தேர்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் General Medicine படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் முன் அனுபவம் போன்ற தகவலை தெரிந்துகொள்ள அறிவிப்பை பார்க்கவும்.
RBI வங்கி பணிக்கு தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை பார்க்கலாம்.
RBI வேலை 2021 சம்பள விவரம் :
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஊதியமாக 1 மணி நேரத்திற்கு ரூ.1,000/- சம்பளமாக பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி உடையவர்கள் வரும் அக்டோபர் 20 வரை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.