சென்னை, கோவை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 35 நகரங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் (Technology), வாடிக்கையாளர் சேவை (Customer service), செயலாக்கம் (Processing) உள்ளிட்ட பிரிவுகளில் நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் Director HR தீப்தி வர்மா அளித்த பேட்டியில் கூறியது
இந்தியாவில் தற்போது பல்வேறு பிரிவுகளில் சுமார் 8 ஆயிரம் வேலைவாய்ப்பு அமேசான் நிறுவனம் வழங்கவுள்ளது.அதற்கு முதலில் நாங்கள் சென்னை, கோவை, பெங்களூரு, லூதியானா, ஜெய்ப்பூர், கான்பூர், லூதியானா, ஹைதராபாத், சூரத், புனே ,கொல்கத்தா, மும்பை, நொய்டா, அமிர்தசரஸ், அகமதாபாத், போபால் போன்ற இந்தியாவில் உள்ள சில முக்கிய நகரங்களை தேர்வு செய்துள்ளோம்.எனவே இந்த நகரங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு முதல் கட்டமாக நேரடி வேலைவாய்ப்பு வழங்க உள்ளோம்.
தேர்வு செய்து பணியமர்த்த பட்ட இளைஞ்சர்கள் தொழில்நுட்பம்(Technology), வாடிக்கையாளர் சேவை (Customer service), செயலாக்கம்(Processing) , போக்குவரத்து (Transport) போன்ற வெவ்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
மேலும் பல்வேறு பிரிவுகளிலும் வேலைக்கு ஆட்களைச் சேர்க்க இருக்கிறோம்.
குறிப்பாக Human Resource , நிதி, Law உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம்.
2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வேலைவாய்ப்பு
மேலும் Amazon Director HR தீப்தி வர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது அமேசான் நிறுவனம் சுமார் 20 லட்சம் பேருக்கு 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் தங்கள் ஏற்கனவே இந்தியாவில் சுமார் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி உள்ளதாகவும் மேலும் கொரோனா காலகட்டத்தில் கூட அமேசான் நிறுவனம் 3 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியது.
அவர்கள் அனைவரும் காணொலி மூலமே தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு முறை எப்படி நடைபெறும்
இந்தியாவில் அமேசான் நிறுவனம் தற்போது வளர்ந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம். வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் முகாம் நடத்த இருக்கிறோம்.
Online மூலம் நடக்கும் இந்த முகாமில், அமேசான் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் அனுபவங்கள், பணிச் சூழல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வார்கள். இது மட்டும் இல்லாமல் சுமார் 140 அமேசான் நிறுவன ஊழியர்கள், 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்களையும் நடத்த உள்ளனர்.
I am b.ed graduate. I have no experience but some experience in computer. If any job related plz suggest me.
Follow our blog to get more updates
My dream join Amazon please sir