12 ஆம் வகுப்பு தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது. வரலாற்றின் முதல் முறையாக பிளஸ் டூ (+2) தேர்வு முடிவுகள் மாணவர்கள் தேர்வு எழுதாமலே வெளியாக இருக்கிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் என அனைவரும் சற்று ஆவலோடு இந்த தேர்வு முடிவினை எதிர்நோக்கி உள்ளனர்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
கொரோனா நோய் தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவ தொடங்கியது. அதன் பிறகு ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. பின்னர் நோய் தொற்று குறைய படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு வருகிறது, இருந்தாலும் நோய் தோற்று முழுமையாக குறையவில்லை, இந்த கொரோனா நோய் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் பொதுமக்களும் பிறகு பொதுதேர்விற்க்கு தயாராகும் பிளஸ் டூ (+2) தேர்வு மாணவர்கள் தான். இந்த வருடம் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கொரோனா நோய் தொற்று 2-ஆம் அலை பரவலால் தேர்வை தமிழக பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்தது. எனவே தேர்வு முடிவுகள் எவ்வாறு கணக்கிடப்பட்டு வெளியாகும் என கீழே காணலாம்.
+2 மதிப்பெண் கணக்கீடு
தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையின் படி பிளஸ் டூ (+2) மாணவர்களின் முடிவு பருவ தேர்வு மற்றும் இன்டெர்னல் அசெஸ்மென்ட் (Internal Assessment) மதிப்பீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும். தேர்வுகளுக்கு பதிவுசெய்த அனைத்து மாணவர்கள் தங்களது முடிவுகளை டிஜிஇ டிஎன் வலைத்தளமான dge.tn.gov.in இல் 19.07.2021 இன்று காலை 11 மணிக்கு தெரிந்து கொள்ளலாம்.