தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் நேற்றும் முதல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் விவரம்
(ஜனவரி 9) ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில்கள் இயங்காது. உணவகங்களில் பார்சல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் வழிபாட்டுத் தளங்களில் மக்களுக்கு தடை.
இரவு 10 மணி முதல் காலை 05 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
திரையரங்குகளில் ஏற்கனவே அறிவித்தபடி 50 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி.
தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக் கிழமைகளுக்கு பதிலாக சனிக்கிழமைகளில் நடைபெறும்.
1 முதல் 9 வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை.
தனியார் பயிற்சி மையங்கள் செயல்பட தடை.
உணவகங்கள், துணிக்கடைகள், விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி.