தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டிற்கு மேல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் அணைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன்(Online) வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதனால் பல மாணவர்களுக்கு பெரும் சவால்களை இந்த ஆன்லைன் வகுப்புகள் கொடுத்தன. பெரும்பாலானோர் வீட்டில் இணைய சேவை இருக்காது, மற்றும் பல மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்(SmartPhone) கூட வாங்க முடியாத நிலையில் தள்ளப்பட்டு இருந்தார்கள். ஆன்லைன் வகுப்புக்கு இந்த இரண்டுமே அடிப்படை தேவை. எனவே இதில் பெரும் பாலானோர் பாதிக்க பட்டது கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தான்.
புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கி உள்ளது
இந்நிலையில் வருகின்ற புதிய கல்வி ஆண்டிற்கு தேவைப்படும் புத்தகங்களை அச்சிடும் பனி வேகமாக நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு பள்ளிகள் அனைத்தும் கொரோனவால் மூடப்பட்டது, இந்த வருடம் தொடக்கத்தில் மேல் நிலை பள்ளிகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பொது தேர்வுக்கு தயாராகி கொண்டுருந்தனர். எனவே கொரோன பரவல் அதிகரித்த நிலையில் அவையும் மூடப்பட்டது.
பிறகு பள்ளி கல்வி துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்று அறிவித்தனர்.
அடுத்த புதிய பள்ளி காலாண்டு தொடங்கவுள்ளது
எனவே அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில் அணைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசு பள்ளிகளுக்கு அச்சிட்ட புதிய புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிக்கை வெளியாகவுள்ளது.