தமிழ்நாடு அரசு தாலுகா அலுவலகங்களுக்கு சென்று ஜாதி சான்றிதழ் விண்ணப்பிப்பதை தவிர்க்க எளிய வழிமுறையில் தமிழ்நாடு அரசு இசேவை இணையதளத்தை பயன்படுத்தி உங்கள் மொபைல் போனில் நீங்களே விண்ணப்பிக்கலாம்.
இதனால் தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாடு அரசு ஜாதி சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
- முதலில் தமிழ்நாடு அரசு https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பயனாளர் உள்நுழைவு என்பதை தேர்வு செய்யவும்
- நீங்கள் புதிய பயனாளராக இருக்கும் பட்சத்தில் New User என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- Register செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணை வைத்து லாகின் செய்யவும்
- பிறகு சர்வீசஸ் என்பதை தேர்வு செய்து ரெவின்யூ டிபார்ட்மென்ட் (Revenue Department) என்பதை கிளிக் செய்யவும்.
- அதில் பல்வேறு சான்றிதழ்கள் பெயர்கள் தோன்றும்.
- Community Certificate என்பதை தேர்வு செய்து CAN நம்பரை பதிவு செய்யவும். பிறகு உங்கள் விவரம் மற்றும் தந்தை, தாய் விவரம், முகவரி போன்றவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். பின் தேவையான Documents ஐ அப்லோட் செய்ய வேண்டும் உதாரணமாக போன்றவை.
- பின்னர் 60 ரூபாய் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
- நீங்கள் அப்ளை செய்த சில நாட்களில் சான்றிதழ் பெறலாம்.