Wednesday, January 22, 2025

Game Changer Review: கேம் சேஞ்சர் விமர்சனம், எப்படி இருக்கிறது பொங்கலுக்கு தரமான படம்!

Game changer Review in Tamil

கேம் சேஞ்சர் விமர்சனம்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு வெளியாகியுள்ள படம் “கேம் சேஞ்சர்” ராம் சரண் முன்னணி கதாபாத்திரமாகவும், கியாரா அத்வானி, அஞ்சலி, S.J.சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த கேம் சேஞ்சர் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார் மற்றும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Game Changer Twitter Review ரசிகர்கள் விமர்சனம்

இந்த படம் ஒரு சமூக படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என ட்விட்டரில் ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது ஒரு பக்கா கமெர்ஷியல் படமாக இருக்கும் எனவும் கூறுகிறார்கள்

இது ஒரு நேர்மையான IAS அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் கதை, அதில் எஸ்.ஜே.சூர்யா அரசியல் கதாபாத்திரமாக நடித்து படத்தை ப்ளாக்பஸ்டர் ஆக்க பெரிதும் உழைத்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கேம் சேஞ்சர் திரைவிமர்சனம் – Game changer movie public talk

முதல் நாள் வெளியான முதல் காட்சியை ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க ரசிகர்களுடன் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் சென்றுள்ளனர்.

இந்த படத்தில் உள்ள ‘ஜருகண்டி’ பாடல் மிகவும் பிரமாண்டமாக உள்ளது எனவும் படத்தின் விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சமுத்திரக்கனியின் நடப்பு இந்த படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.

கேம் சேஞ்சர் ப்ரீ புக்கிங் வசூல்

முதல் நாள் காட்சி ப்ரீ புக்கிங்கிலேயே இந்த படம் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதல் நாளான இன்று இறுதி வசூல் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல சினிமா தகவலுக்கு Today Tamil News தளத்தை பார்க்கவும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles