ஒன்றிய அரசு புதிய அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது அதன் படி இனி வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் இனிமேல் RTO அலுவலகம் சென்று RTO ஆய்வாளர் முன்னிலையில் எட்டு போட்டு ஓட்டுநர் உரிமம் பெற தேவ இல்லை. எனவே இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
எந்த பயிற்சி மையங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் ?
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) அதன் அறிக்கையில் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர்கள் பயிற்சி மையங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என அறிவித்துள்ளது, இது ஜூலை 1 முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் அறிக்கையின்படி, “இதுபோன்ற பயற்சி மையங்களில் சேர்ந்து பயற்சி பெற வரும் பொது மக்கள் முறையான பயிற்சியையும் ஓட்டுநர் அனுபவத்தையும் வழங்க இது உதவும்.” ஒன்றிய அரசு அறிக்கையின் படி எந்ததெந்த ஓட்டுநர் பயிற்சி மையங்கள் அரசு உரிமம் பெற்று அரசு விதிமுறை படி செயல்பட்டு வருகிறதோ அந்த ஓட்டுநர் பயற்சி மையங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.இதன் மூலம் ஓட்டுனர்கள் ஏதேனும் அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு சென்று தங்கள் பயிற்சியை நிறைவு செய்த பின்பு அதை ஒரு வீடியோவாக பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்பு அந்த வீடியோவை சம்பந்த பட்ட அதிகாரிகள் பார்த்த பின்பு ஓட்டுநர் உரிமம் உங்கள் கைகளில் வந்து சேரும்.எனவே இந்த மையங்களில் வெற்றிகரமாக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் ஓட்டுநர் சோதனைத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள், இது தற்போது பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ) எடுக்கப்படுகிறது.