இந்தியாவிற்கு தடுப்பூசி படென்ட் தர முடியாது பில்கேட்ஸ்
உலகளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் எப்போது கட்டுக்குள் வரும் என்பது பெரும் புதிராகவே உள்ளது. தற்போது உபயோகத்தில் உள்ள covaxin, covishield போன்ற தடுப்பூசிகள் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (serum institute of technology)தற்போது மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் மூல பொருள்கள் காரணமாக கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
கொரோனா தடுப்பூசி பார்முலாவை தர மறுத்த பில்கேட்ஸ்
கொரோனா தடுப்பூசி பார்முலாவை இந்தியாவிற்கு பகிர்ந்து கொள்ளமாட்டோம் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க பல நூறு மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளார் இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பேட்டனை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பகிர முடியாது என தெரிவித்துள்ளார். இந்தியாவில் தடுப்பூசி உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு, டெக்னாலஜி ஆகியவை இல்லை எனவும் பற்றாக்குறையாக இருப்பதால், கொரோனா தடுப்பூசி பேட்டனை பகிர்ந்து கொள்வது தேவையற்றது எனத் தெரிவித்தார். மேலும் தங்களிடம் மட்டுமே இதற்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் டெக்னாலஜி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதை பலர் பில்கேட்ஸ் இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கோடு செயல் படுகிறார் என அவரை பலரும் சாடி வருகின்றனர்.