தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தை சமாளிக்க மாநிலத்தில் உள்ள சுமார் 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 13 மளிகை பொருட்கள் கொண்ட கொரோனா நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
இதற்காக தமிழக சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் டெண்டர்களை அறிவித்து. மறைந்த முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 முதல் இந்த மளிகை பொருட்கள் விநியோகிக்கப்படலாம் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த 13 மளிகைப் பொருட்களின் விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இலவச மளிகைப் பொருட்கள் விவரம்
- அயோடைஸ் உப்பு – 1 கிலோ
- கோதுமை மாவு – 1 கிலோ
- ரவை – 1 கிலோ
- சர்க்கரை – அரை கிலோ
- உளுந்தம் பருப்பு – 1/2 கிலோ
- புளி – 250 கிராம்
- துவரம் பருப்பு – 250 கிராம்
- கடுகு – 100 கிராம்
- சீரகம் – 100 கிராம்
- மஞ்சள் தூள் – 100 கிராம்
- மிளகாய் தூள் – 100 கிராம்
- ஒரு பிராண்டட் சலவை சோப் – 1 (250 கிராம்)
- ஒரு பிராண்டட் குளியல் சோப் – 1 (125 கிராம்).
ஊரடங்கு நிவாரண உதவிகளாக குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் எம்.கே.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி முதல் தவணை ரூ.2000 விநியோகம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
தற்போது ஜுன் 2021 மாத பொது விநியோகத் திட்டத்தை பாதுகாப்புடன் செயல்படுத்த நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் டோக்கன்கள் வழங்கி விநியோகத்தினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 1 முதல் 04 வரை 4 தினங்களுக்கு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பொருட்கள் பெறுவதற்காண டோக்கன்களை விநியோகம் செய்வார்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று கொரோனா நிவாரண கூடுதல் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பண்டங்களை (துவரம் பருப்பு) உள்ளிட்டவற்றை பெற்றுச் செல்ல வேண்டும்.
டோக்கன்கள் அடிப்படையில் இந்த ஜுன் மாதத்திற்கான விநியோகம் வருகிற 05 ஆம் தேதி சனிக்கிழமை முதல் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நிர்வாக காரணங்களால் துவரம் பருப்பு விநியோகம் மட்டும் ஜூன் 07 முதல் நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.