தமிழ்நாட்டில் கொரோன காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் அவர் அளித்த பேட்டியில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் சங்கத்தினர் உடனான ஆலோசைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவரை கூறினார்.
+2 பொது தேர்வு ஒத்திவைக்கப்படுமே தவிர ரத்து செய்யப்படமாட்டாது மற்றும் மாணவர்களுக்கு போதிய அவகாசம் அளித்து பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏற்கனவே அறிவித்திருந்த படி தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னரே மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
எனவே தேர்வுக்கு தயாராக பள்ளி மாணவர்களுக்கு போதிய நேரம் கிடைக்கும் என்றும், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் படி இந்த முடிசு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தற்போது தெரிவித்திருக்கிறார்.
இரண்டு மாதங்களாகியும் நடைபெறாமல்
இருப்பது மானவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அமைச்சருடைய இந்த அறிவிப்பு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.