நாம் உண்ணும் உணவு நம்முடைய உடலுக்கு போதிய சக்தியை தருவது மட்டும் அல்லாமல் ஒரு மன மகிழ்ச்சியை தருகிறது. பிடித்த உணவுகளை நன்றாக சாப்பிடுவது ஒரு நல்ல பழக்கம். அனால் பலர் வயிறார சாப்பிட்ட உடனே சில தவறுகளை செய்கின்றனர் அது உடம்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று தெரியாமல் அறியாமையில் செய்கின்றதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சரி அது என்ன சாப்பிட உடனே செய்யக்கூடாத செயல்கள் என்று பார்ப்போம்.
சிலர் மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிட்டப்பிறகு உடனே சென்று தூங்கிவிடுவர் இதனால் வயிறில் உள்ள உணவு செரிமானம் ஆகாமல் வாயு பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
அடுத்து சாப்பிட்ட உடனே குளிக்க செல்வது. பலரும் மத்திய வேளைகளில் சாப்பிட்ட உடனே சென்று குளிப்பார்கள் அவ்வாறு செய்யும் பொது. உணவு வயிற்றில் செரிமானம் ஆகாமல் நின்று விடும். இதனால் வயிற்று உபாதைகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
சிலர் சாப்பிட்ட அடுத்த நிமிடமே புகை பிடிக்க ஆரம்பித்து விடுவர் இது மேலே உள்ள செயல்களை விட அதிக தீங்கு ஏற்படுத்தும்.
சரி சாப்பிட்டவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் மதிய மற்றும் இரவு உணவு உண்டபிறகு சிறிது நேரம் உட்கார வேண்டும் அல்லது நடக்க வேண்டும். இதனால் உணவு சரியாக செரிமானம் ஆகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.