Saturday, November 23, 2024

மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் வேலைவாய்ப்பு சம்பளம், சலுகைகள் விவரம்

மத்திய அரசு இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற ஒரு புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கியுள்ளது. அதன்படி அக்னி பாத் என்ற திட்டத்தின் மூலம் ராணுவத்தின் 3 படை பிரிவுகளிலும் 4 வருட கால ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் வேலைக்கு பணி அமர்த்தப்பட உள்ளனர்.

இந்த பணியில் சேருபவர்களுக்கு சம்பளம், உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Agneepath Recruitment 2022 இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணபிக்கலாம்?

17 1/2 வயது முதல் 21 வயது வரை விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும். இவர்கள் நான்கு ஆண்டு பணிக்கு பிறகு வீரர்களில் 25% பேர் வழக்கமான பணிகளுக்கு கீழ் கொண்டு வரப்படுவார்கள். 4 ஆண்டுகால பணிக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் சேவ நிதி பேக்கேஜ் வழங்கப்படும். மற்றும் இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்கும்.

Agneepath Scheme சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

முதலாம் ஆண்டில் சம்பளம் – ரூ.30,000, அதாவது பிடித்தம் போக ரூ.21,000 கிடைக்கும். மேலும் இதில் அக்னி வீர் கார்ப்பஸ்-க்காக 9000 ரூபாய் செலுத்தப்படும்.

இரண்டாம் ஆண்டில் ரூ.33,000 சம்பளம், கையில் ரூ.23,100 கிடைக்கும். இதில் 9,900 ரூபாய் அக்னிவீர் கார்ப்பஸிக்கு செல்லும்.

மூன்றாம் ஆண்டில் ரூ.36,500 சம்பளம் கிடைக்கும். இதில் ரூ.25,580 சம்பளம் கையிலும், ரூ.10,950 அக்னி வீர் கார்ப்பஸ் ஆகவும் செல்லும்.

நான்காவது ஆண்டில் ரூ.40,000 சம்பளம் ஆகும். இதில் கையில் ரூ.28,000 சம்பளமும், ரூ.12,000 அக்னிவீர் கார்ப்பஸ்-க்கும் செல்லும்.

அக்னி வீர் கார்ப்பஸ் Agniveer Corpus Fund (சேவா நிதி பேக்கேஜ்)

4 ஆண்டுகளில் இந்த அக்னிவீர் சேவா நிதிக்கு நீங்கள் செலுத்தும் தொகை 5.02 லட்சம் ரூபாய் ஆகும். இதே போல ஒரு பங்கினை இந்திய அரசும் செலுத்தும். ஆக 4 ஆண்டுகள் முடிவில், வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு 11.71 லட்சம் ரூபாய் கிடைக்கலாம்.

4 வருட பணிக்கு பின்பு Agneepath Scheme Army Recruitment Regular பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles