தமிழக மக்களுக்கு வருகின்ற பொங்கலுக்கு சிறப்பு தொகுப்புடன் கூடிய பொங்கல் பரிசு வழங்க போவதாக முதல்வர் மூ.க ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
இந்நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரூபாய் 500 மதிப்புள்ள வெல்லம், முந்திரி, திராட்சை,ஏலக்காய், நெய்,கரும்பு ,பச்சரிசி மற்றும் கடலை பருப்பு, மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மொத்தம் 21 வகை பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ளதாக தமிழக சார்பில் அறிவிப்பு வெளியானது.
இந்த பரிசு தொகுப்புகள் அணைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொக்கப் பரிசு வழங்க வேண்டும்
இந்நிலையில் பல்வேறு தரப்பினர் போன ஆண்டு வழங்கியது போல் இந்த ஆண்டும் ரொக்கப்பணம் பரிசாக வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் அரசு இந்த முறையும் ரூபாய் 5000 பரிசாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பிற்கு ரூ.1,17,70,000 ரூபாய் நிதியாக தமிழக அரசு ஒதுக்கியுள்ளது மேலும் ரொக்கப்பணம் பரிசிற்கு அரசு கூடுதலாக நிதி ஒதுக்குமா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எனவே அறிவித்துள்ள பரிசு தொகுப்பு வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி முதல் தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.