தமிழகத்தில் கொரோன பரவல் அதிகரித்ததால் அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் தேர்தலுக்கு பின் முழு ஊரடங்கு போடபட்டது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கபட்டது.
மேலும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது கொரோன பரவல் சற்று குறைந்த நிலையிலும் தற்போது ஊரடங்கை மேலும் நீடித்து உள்ளனர். இதற்கான முக்கிய காரணம் கொரோனா மூன்றாம் அலை வர போவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், மேலும் தமிழக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் இந்த ஊரடங்கை முதலமைச்சர் நீடித்து உள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதன் படி ஏற்கனவே முடியப்போகும் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீடித்து அதாவது ஜூன் 28-வரை தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அதோடு சேர்ந்து ஒரு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை இப்பொது நாம் காணலாம்.
ஊரடங்கு தளர்வுகள் முழு விவரம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஏற்கனவே காலை 6 முதல் 5 மணி வரை மளிகை கடைகள் டி.கடை போன்ற கடைகள் எல்லாம் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இப்பொது இரவு ஏழு மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் உணவகம் எல்லாம் அதே போல் நேர கட்டுப்பாடுடன் (பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி) இயங்கும் எனவும், அரசு அலுவகத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம், பிறகு தனியார் தொழிற்ச்சாலைகளில் 100 சதவீத பணியாளர்கள் கொண்டு இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளும் தொடர்ந்து நடை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரானிக் பொருள்கள் பழுது நிக்கும் கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கிடையே பேருந்துகள் இயங்கும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் குறிப்பாக கடைகள் இயங்கும் நேரம் மட்டும் சற்று உயர்த்தி இருக்கின்றனர் மற்றும் ஒரு சில கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.