பொதுவாக நாம் அனைவரும் படிக்கட்டுகளில் ஏறுவதை தவிர்க்க ஒரு லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரை தேடுவோம், ஆனால் சென்னையைச் சேர்ந்த ஆதவ் என்ற சிறுவன் படிகளில் ஏறுவதில் சில தனித்துவமான செயல் செய்துள்ளான். அதாவது கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளான். ஹூலா ஹூப்பிங் செய்து கொண்டே 50 படிகளை வேகமாக ஏறியுள்ளான். இதனை கின்னஸ் உலக சாதனை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளது, 50 படிக்கட்டுகளை ஆதவ் சுகுமார் வெறும் 18.28 வினாடிகளில் செய்துகொண்டு கடந்துள்ளான். அதிவேகமாக கடந்து சாதனை படைத்த ஆதவ்விற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான மேன் Vs வைல்ட்யில், மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் சாகசக்காரர் பியர் கிரில்ஸ். இவர் சென்னை சிறுவனை வாழ்த்தி, “நன்றாக செய்த ஆதவ்” என்று அந்த கின்னஸ் உலக சாதனை பக்கத்தின் கமெண்டில் தெரிவித்துள்ளார்.
அவர் படிக்கட்டில் ஓட செலவழித்த நேரம் பதிவு செய்யப்பட்டதா இல்லையா என்று பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் அதை Guinness World Record பிரிவு உறுதி செய்துள்ளது. முன்னதாக, இந்த ஹூலா ஹூப்பிங் சாதனை அமெரிக்காவின் அஷ்ரிதா ஃபர்மனுக்கு சொந்தமானது 23.39 வினாடிகளில் இந்த சாதனையை அவர் அடைந்தார். தற்போது அந்த கின்னஸ் உலக சாதனை சென்னை சேர்ந்த ஆதவ் முறியடித்துள்ளது பாராட்டிற்குரியது.