Saturday, November 23, 2024

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து லிவிங்ஸ்டன் திடீர் விலகல் காரணம் என்ன

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே இங்கிலாந்து அணி வீரர்களான ஆர்ச்சர் மற்றும் பெண் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக வெளியேறி உள்ளனர்.இது ராஜஸ்தான் அணிக்கு பௌலிங் மற்றும் பேட்டிங்கில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும். ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இல்லாமல் அந்த அணி தடுமாறி வருகிறது.இதனால் ஒரு சில போட்டிகளில் தோல்வியும் அடைந்தார்கள். எனவே ஸ்டாக்ஸ்க்கு பதிலாக டேவிட் மில்லர் அணியில் இடம் பெற்றுள்ளார் இது அவர்களுக்கு சற்று வலுவை தரும் .

இங்கிலாந்து திரும்பிய லியாம் லிவிங்ஸ்டன் ?

இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் முதல் முறை IPL தொடரில் பங்கேற்கிறார்.அவர் ஒரு ஆல் ரவுண்டர் ஆவர். ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகிய போது இவர் தான் அவருக்கு பதிலாக விளையாடுவர் என எதிர்பார்த்த நிலையில் மில்லர் விளையாடி வருகிறார். எனினும் அவர் வரும் போட்டிகளில் கலம் ஏறக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில்( Bubble Fatigue )காரணமாக அதாவது நீண்ட காலமாக அவர் பல்வேறு தொடர்களில் பங்கேற்று விளையாடி வந்துள்ளார் குறிப்பாக சொல்ல போனால் KFC BIG BASH தொடர், INDIA VS ENGLAND தொடர் என தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.

கொரோன காரணமாக வீரர்கள் அனைவரும் தங்களை தனிமை படுத்தி கொள்ள வேண்டும்(இதை Bio-Bubble என அழைப்பர் ) இதை அவர் நீண்ட காலமாக செய்து வந்துள்ளதால் இதனால் ஏற்படும் கவலை மனஅழுத்தம் தூக்கமின்மையால் தவித்து வந்துள்ளார் எனவே அவர் அணி நிர்வாகத்திடம் இதை பற்றி கூறியுள்ளார். பிறகு அவர் இங்கிலாந்து செல்வதாகவும் தன் குடும்பத்தோடு ஓய்வு எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார் இதற்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் அனுமதித்துள்ளது இதனை தொடர்ந்து அவர் நேற்றிரவு இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles