Tuesday, December 3, 2024

வாட்ஸாப்ப் பயனாளர்கள் கவனத்திற்கு உடனே அப்டேட் பண்ணுங்க !

தற்போது வெளியான அறிக்கையின்படி இளஞ்சிவப்பு நிறத்தில் வாட்ஸ்அப் ஒன்று பயனாளர்கள் மத்தியில் உளவி வருகிறது, இது iOS மற்றும் Android ஆகிய இரண்டு இயங்குதளங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இது WhatsApp மற்றும் WhatsApp Business வாடிக்கையாளர்களை பாதிக்கும் வகையில் தகவல் திருட்டு மற்றும் வைரஸ் போன்ற தீங்கு செயல்களை செய்கிறது.

Android இல் பதிப்பு v2.21.4.18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களைப் பயன்படுத்துபவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள், அதே நேரத்தில் iOS இல் பதிப்பு 2.21.32 மற்றும் பழைய அப்டேட் வைத்திருப்பவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே வாட்ஸாப்ப் நிறுவனம் தனது பயனர்களை புதிய அப்டேட்டிற்கு தங்களது செயலியை அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அது என்ன Pink Whatsapp?

Pink WhatsApp இது ஒரு மாள்வர் இதை போனில் இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் வாட்ஸாப்ப் கணக்கிற்கு யாராவது ஒருவர் மெசேஜ் செய்தால் அவர்களுக்கு அது தானாகவே ஒரு வைரஸ் லிங்க்’ஐ அனுப்பிவைக்கிறது.

இந்த முக்கிய தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மற்றும் இதை பற்றி சிலர் கூகுளில் Pink whatsapp download என்று தேடிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles