14வது ஐபில் டி20 தொடர் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ஐபில் டி20 2021 தொடரின் 8வது போட்டி இன்று நடைபெறுகிறது இதில் சென்னை அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.முதல் போட்டியில் தோற்ற சென்னை அணி இந்த போட்டியில் பஞ்சாப் அணியை வெல்லும் முனைப்போடு ஆடுவார்கள் என எதிர்பாக்கலாம்.பஞ்சாப் அணியும் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கடைசி ஒவேரில் திரில்லிங் வெற்றி பெற்றது .எனவே இந்த வெற்றி அவர்களுக்கு போட்டியை வெல்ல சாதகமாக இருக்கும் என எதிர்பாக்கலாம்.
சென்னை vs பஞ்சாப் யாருக்கு வெற்றி வாய்ப்பு ?
சென்னை அணி பொறுத்த வரையில் ரெய்னா அணிக்கு திரும்பி உள்ள நிலையில் பேட்டிங்கிற்கு அவர் சற்று வலு சேர்த்து உள்ளார் ஆனால் பௌலிங் சற்று பின்னடைவு தான்.சென்னை அணியில் ஒரு ஸ்பேசியலிஸ்ட்(specialist) பௌலர் கூட இல்லை அனைவரும் ஆல்ரவுண்டர் தான் போட்டியில் விளையாடிகிறார்கள் இது எதிரணிக்கு சற்று சாதகமாக இருக்கும் .மேலும் டோனி அவர்கள் மீதும் பெரும் எதிர் பார்ப்பு மற்றும் விமர்சனம் உள்ளது.குறிப்பாக அவர் தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு குடுப்பதில்லை என விமர்சனமும் அவர் மீது உள்ளது எனவே இந்த போட்டி அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் .பஞ்சாப் பொறுத்தவரை பேட்டிங்கில் வலுவாக உள்ளார்கள் ஆனால் பௌலர்கள் ரன் கலை வாரி வழங்குகிறார்கள் இது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான்.எனவே எங்கள் கணிப்பின் படி பஞ்சாப் இந்த போட்டியில் வெல்ல வாய்ப்பு உள்ளது
ஐபில் டி20 தொடரின் முதல் ஆட்டத்திலேயே சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தோல்வியை தழுவியது மட்டுமின்றி, பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியிலும் டோனி பந்து வீச அதிக நேரம் எடுத்து கொண்டால் அவர் போட்டிகள் விளையாட தடை செய்யப்படுவர் என நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார் இந்த செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.